தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் ” உயிரியல் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவியல்” என்ற தலைப்பில் ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி தொடக்கம்

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் ” உயிரியல் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவியல்” என்ற தலைப்பில் ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி தொடக்கம்

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி, விலங்கியல் துறை சார்பில் “உயிரியல் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவியல்” என்ற தலைப்பில் ஒரு வார சர்வதேச ஆன்லைன் ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி 18.08.2025 முதல் 25.08.2025 வரை வெற்றிகரமாக தொடங்கப்பட்டது.

துறைத் தலைவர் முனைவர் ராதிகா, இணைப் பேராசிரியர், இந்தியா முழுவதும் 50 கல்வி நிறுவனங்களிலிருந்து கலந்து கொண்ட 110 பேராசிரியர்களுக்கு வரவேற்பு தெரிவித்ததுடன், சிறப்புரையாற்றிய டாக்டர். தியாகு, இணைப்பேராசிரியர், கல்வித் துறை, மத்திய பல்கலைக்கழகம், கர்நாடகா அறிமுகப்படுத்தினார்.

கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு தமது துவக்க உரையின் மூலம் நவீன ஆய்வுகள் பற்றி எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினர் “ஹைபிரேட் ரிசர்ச்சர் ஹியூமன் இண்டலெக்ட் மீட் மெஷின் இன்டெலிஜென்ட்ஸ்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி, ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகளுக்குப் பயனுள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை விரிவாக எடுத்துரைத்தார்.