மனோன்மணியம் பல்கலைக்கழகம் 32 வது பட்டமளிப்பு விழா :
ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு.
திருநெல்வேலி மாவட்டம், அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில்
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக் கழகத்தில் இன்று (ஆகஸ்ட் 13) காலை 32- ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழக ஆளுநர் ஆர். என் ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வந்தார். அப்போது, நாகர்கோவிலைச் சேர்ந்த ஜீவிதா என்ற மாணவி பிஹெச்டி பட்டம் பெறுவதற்காக மேடைக்கு வந்தார். அப்போது, அந்த மாணவி ஆளுநர் ஆர். என் ரவியிடம் பட்டம் பெற மறுத்தார். இதைத் தொடர்ந்து, அருகில் நின்று கொண்டிருந்த பல்கலைக்கழக துணை வேந்தரிடம் பட்டத்தை பெற்றுச் சென்றார். இந்த நிகழ்வால் விழாவில் பங்கேற்றிருந்த அனைவரும் திகைத்துப் போயினர்.

பின்னர், இது குறித்து அந்த மாணவி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். இதனால், ஆளுநர் ஆர். என். ரவியிடம் பட்டம் பெறுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. இதனால், அருகில் நின்ற துணை வேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொண்டேன் என்று தெரிவித்தார். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவியிடம் மாணவி பட்டம் பெற மறுத்தது பல்கலைக்கழகத்தில் பேசும் பொருளாகியது.
மாணவி செய்தியாளர்களிடம் கூறியது :
‘’திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவள் நான்’’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த ஜீன் ஜோசப், ஆளுநர் தமிழகத்துக்கு எதிராக செயல் படுகிறார் என்றும் தனது கணவர் நாகர்கோவில் மாநகர துணை செயலாளர் ஆக உள்ளார் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












