தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் புள்ளியியல் பகுப்பாய்வு வகுப்பு
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி, பவள விழாவை முன்னிட்டு, உள் தர மதிப்பீட்டுக் குழு (IQAC), SPSS மற்றும் AMOS பயன்படுத்தி புள்ளியியல் பகுப்பாய்வு குறித்த 2 நாள் பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்துள்ளது.

புகழ்பெற்ற புள்ளியியல் நிபுணரும், சிறப்பு விருந்தினர் “தமிழ்நாடு விஞ்ஞானி விருது” பெற்ற டாக்டர். ராவணன் நடத்தி வைத்த இந்த பயிற்சி வகுப்பு இன்று (12.08.2025) நடைபெற்றது.
ஆய்வாளர்கள், முதுநிலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியை நடத்திய உள்தர மதிப்பீட்டு குழுவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு பாராட்டு தெரிவித்தார்.














