SSLC / +1 துணைத் தேர்வு முடிவுகள் இன்று (31.07.2025) வெளியீடு!

SSLC / +1 துணைத் தேர்வு முடிவுகள் இன்று (31.07.2025) வெளியீடு!

ஜூலை – 2025 பத்தாம் வகுப்பு/ மேல்நிலை முதலாம் ஆண்டு ( + 1 ) துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வுகள் 31 – 7 – 2025 இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2:30 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று RESULT என்ற வாசகத்தை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் SSLC/HR SEC FIRST YEAR SUPPLEMENTARY EXAM JULY – 2025

PROVISIONAL CERTIFICATE DOWNLOAD” என்ற வாசகத்தினை கிளிக் செய்து தேர்வர்கள் தங்களது தேர்வெண் (Roll No) மற்றும் பிறந்த தேதி ( Date of Birth ) ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தங்களது தேர்வு முடிவினை தற்காலிக மதிப்பெண் சான்றிதழாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.