டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வு கேள்விகள் கடினம், தேர்வர்கள் புலம்பல் எதிரொலி :
விளக்கம் தருமா டிஎன்பிஎஸ்சி ?
குரூப் 4 தேர்வில் தமிழ் பகுதி கடினமாக இருந்ததாக தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பத்தாம் வகுப்பு தரத்திற்கு மேல் கேள்விகள் கேட்கப்பட்டதால், தமிழ் வழியில் பயின்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்த 12ம் தேதி நடைபெற்றது. சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பத்திருந்த நிலையில் 11 லட்சத்து 50 பேர் மட்டுமே தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த முறை, வினாத்தாளில் பொதுத் தமிழ் தொடர்பான கேள்விகள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறியிருந்தனர்.
தமிழ்மொழிப் பகுதியில் பண்டைய ஓலைச்சுவடிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் குரூப் 4 தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என நாம் தமிழர் மற்றும் தவெக கட்சியினர் கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












