பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது :

பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது :

பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்தும் வாட்டர் பெல் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு நாளும் காலை 11.00 மணி,பகல் 1.00 மணி மற்றும் பிற்பகல் 3.00 மணி என மூன்று முறை வாட்டர் பெல் அடிக்கப்படும். அப்போது மாணவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.இதற்காக ஒவ்வொரு முறையும் 3 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் எனவும், மேலும் வகுப்புச் சூழல் பாதிக்காத வகையில், வகுப்பிற்கு வெளியே மாணவர்கள் செல்லாமல் வகுப்பின் உள்ளே இருந்து இதனை செயல் படுத்த வேண்டும் எனவும், மாணவர்கள் தண்ணீர் பாட்டிலை கட்டாயம் கொண்டுவர வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டிருந்தது.

வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளிடையே நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படுவதை தடுக்கவும், நீர்ச்சத்து குறைபாடால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதை தடுக்கவும் இந்தத் திட்டம் கொண்டுவரப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

இந் நிலையில் இந்த திட்டம் இன்று ஜூன் 30 முதல் பள்ளிகளில் நடைமுறைக்கு வந்தது.

அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் அடித்து மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் நடைமுறைப் படுத்தினர்.

இத்திட்டம் பெற்றோர்கள், குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இத்திட்டத்தை இன்று சில தனியார் பள்ளிகளும் நடைமுறைப் படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது.

சி. வ. அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி

அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வேப்பலோடை.

மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ஜின் பேக்டரி சாலை, தூத்துக்குடி.

பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.