2026 ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கு இரண்டு பொதுத்தேர்வுகள

2026 ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கு இரண்டு பொதுத்தேர்வுகள

நாடு முழுவதும் 2026 ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் பயிலும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியதாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ நிர்வாகம் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த பரிந்துரைத்திருந்த நிலையில் அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

10 ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வழக்கம் போல பிப்ரவரி மாதம் ஒரு தேர்வும் அடுத்ததாக மே மாதம் ஒரு பொதுத் தேர்வும் நடைபெறும். இதில் பிப்ரவரி மாதம் நடைபெறும் முதல் பொதுத் தேர்வை மாணவர்கள் கண்டிப்பாக எழுதவேண்டும். இரண்டாம் தேர்வை மாணவ விரும்பினால் அல்லது தேவை இருந்தால் எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் உள்ளிட்ட உள் மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பொதுச் தேர்வுகளையும் எழுதும் மாணவர்களுக்கு எதில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதனை இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

ஒரு தேர்வு மட்டும் எழுதுவதா இரண்டு பொதுத் தேர்வுகளையும் எழுதுவதா என்பதை மாணவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

முதல் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினால், இரண்டாம் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை இறுதியானதாக எடுத்துக் கொள்ளலாம்.

தேர்வு நடைபெறும் முறை பாடப் பிரிவுகள் வினாத்தாள் என அனைத்து பழைய நடைமுறைப்படியே பின்பற்றப்படும் என்றும், மாணவர்களுக்கு ஏற்படும் தேர்வு அழுத்தத்தை போக்க இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.

முதல் பொதுத் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் மாதத்திலும், இரண்டாம் பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.