SSC – SSC CGL – 2025 மத்திய அரசில் + 2 மற்றும் டிகிரி கல்வி தகுதிக்கான பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் தேர்வுக்கான அறிவிப்பு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பிளஸ் 2, கல்வித்தகுதி உடைய பதவிகளில் 3,131, பட்டப்படிப்பு கல்வித் தகுதி உடைய பதவகாலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய (எஸ்எஸ்சி) தென்மண்டல தலைவர் கே.ராகுல், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்குத் தேவையான குரூப்-பி, குரூப்-சி, குரூப்-டி ஊழியர்கள் எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். எஸ்எஸ்சி தேர்வுக்கு நேர்காணல் கிடையாது. கணினிவழியில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றால் அரசு பணி வாய்ப்பு உறுதி.
+ 2 தகுதி தேர்வு :
இந்நிலையில், தற்போது கீழ்நிலை எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகிய பதவிகளில் 3,131 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது வரம்பு 18 முதல் 27 வரை. மத்திய அரசு விதிமுறைகளின்படி இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு (எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத் திறனாளிகள்) வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு நாள் :
இந்த தேர்வுக்கு ஜூலை 18-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முதல்கட்டத் தேர்வு, 2-வது கட்டத் தேர்வு என இரு நிலைகளில் தேர்வு நடைபெறும். முதல்கட்டத் தேர்வு செப்.8 முதல் 18-ம் தேதி வரை கணினிவழியில் நடைபெறும். இந்த பதவிகளுக்கு சம்பளம் ரூ.32 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைனில் மட்டுமின்றி ‘மை எஸ்எஸ்சி’ (mySSC) என்ற செயலி வாயிலாகவும் எளிதாக விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் மிகவும் குறைவு. பெண்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
14,582 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான SSC CGL 2025 தேர்வு :
மத்திய அரசின் பல்வேறு துறைகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் உள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் இத்தேர்வின் மூலம் நிரப்ப உள்ளது.
வெளியுறவு துறை, உளவு துறை, ரயில்வே, தகவல் தொழில்நுட்ப துறை, வருவான வரித்துறை, சிபிஐ, தாபல் துறை, போதை மருந்து தடுப்புதுறை, வெளிநாட்டு வணிக துறை, என்ஐஏ, பாதுகாப்பு துறை உள்ளிட்டவற்றில் உள்ள உதவி அதிகாரி, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஆராய்ச்சி உதவியாளர், ஆடிட்டர், கணக்காளர், வரி உதவியாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது.
இந்தாண்டு தோராயமாக 14,582 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது.
வயது வரம்பு :
SSC CGL 2025 தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 01.08.2025 தேதியின்படி அதிகபடியாக பதவிக்கு ஏற்ப 27 முதல் 32 வரை இருக்கலாம்.
இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி :
01.08.2025 தேதியின்படி, இப்பணியிடங்களுக்கான தேர்வை எழுத அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இளநிலை புள்ளியியல் அதிகாரி பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது 12-ம் வகுப்பு கணிதப் பாடத்துடன் கல்வி நிலையத்தில் படித்திருக்க வேண்டும் (அல்லது) புள்ளியியலில் பட்டப்படிப்பு அல்லது பட்டப்படிப்பில் ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.
புள்ளியியல் புலனாய்வாளர் தரம்-II பதவிக்கு பட்டப்படிப்பில் புள்ளியியல் ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம் :
CGL தேர்வு மூலம் நிரப்பப்படும் இப்பணியிடங்களில் குறைந்தபட்சம் நிலை – 4 கீழ் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம் முதல் அதிகபடியாக நிலை 7 கீழ் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
SSC CGL தேர்வு இரண்டு கட்டமாக நடைபெறும். கணினி வழியில் Tier I & II என நடைபெறும். Tier I தேர்வு பொது அறிவு, நுண்ணிறிவு, ஆங்கிலம், பொது விழிப்புணர்வு ஆகியவற்றில் 100 கேள்விகளுடன் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
இத்தேர்வு கொள்குறி வகையில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடைபெறும். இதில் 0.50 நெகட்டிங் மார்க் உள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கு தகுதி அடைவார்கள். இத்தேர்வு 2 தாள்கள் கொண்டு ந்டைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் பொருட்டு இறுதி முடிவுகள் வெளியிடப்படும். இறுதி முடிவுகள் வெளியாவதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு அந்தந்த துறைகளில் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமுள்ளவர்கள் https://ssc.gov.in/ என்ற இணையதளத்திலும், mySSC என்ற செயலியில் மொபைல் எண் மூலமாகவும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். ஒரு முறை பதிவு செய்து, பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
இதற்கான முதல் கட்ட தேர்வு ஆகஸ்ட் 13 முதல் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, இரண்டாம் கட்ட தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இத்தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தை நிர்ப்பும்போது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் 18003093063 என்ற எண்ணில் அழைத்து தீர்வு காணலாம்.












