தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோவில் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கலை வகுப்புகள், கலையும் கல்வியும் பயிற்சி நடைபெற்றது
தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு பள்ளி மாணவர்களுக்கு கலை வகுப்புகள், கலையும் கல்வியும் பயிற்சியை சகா சங்கர் தொடங்கி வைத்து பயிற்சி அளித்தார்.
மாணவர்கள் ஆர்வமுடன் பயிற்சியில் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு பறை, ஒயிலாட்டம், கரகம் போன்றவை கலைக்குழு மூலம் கற்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு இவற்றிற்கான பயிற்சியை அளிக்க இருப்பதாக சகா சங்கர் தெரிவித்தார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் தங்கமணி ஆலோசனையின் படி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.












