2025 – 2026 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவ – மாணவிகளின் சேர்க்கை 3,12,881 ஐ எட்டியது. மேலும் அதிகரிக்குமா? காரணம் என்ன?

2025 – 2026 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவ – மாணவிகளின் சேர்க்கை 3,12,881 ஐ எட்டியது.
மேலும் அதிகரிக்குமா? காரணம் என்ன?

கல்விச் செய்திகள் டாட் காம்
ஒரு சிறப்புப் பார்வை :

நேற்று வரை அரசுப் பள்ளிகளின் 2025 – 2026 ம் கல்வியாண்டின் மாணவர்கள் சேர்க்கை 3,12,881 ஆக இருந்தது.

அரசு பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ – மாணவிகளின் சேர்க்கை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு தகுந்தார் போல் மாணவ – மாணவிகளுக்கான நலத்திட்டங்களையும் அரசு அறிவித்து வருகிறது.

மேலும் இலவச பாடநூல்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை வழங்கப்படுகிறது.

புத்தகப் பைகள் 1 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வழங்கப்படுகிறது

காலணிகள் 1 முதல் 5 ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

கால ஏந்திகள் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

கால் உறைகள் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

புவியியல் வரைபடம்

1 ம் வகுப்பு மற்றும் 7 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை புதிதாக சேரும் வகுப்பு மாணவ மாணவியருக்கு வழங்கப்படுகிறது.

நோட்டுப் புத்தகங்கள்1 முதல் 10ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

சீருடைகள் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு நான்கு இணை சீருடைகள் கைத்தறி மற்றும் துணி நூல்கள் சமூக நலத்துறை மூலம் வழங்கப்படுகிறது.

மிதிவண்டி :

11 ஆம் வகுப்பு மாணவ மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

பேருந்து பயண அட்டை 1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

சிறப்பு ஊக்கத்தொகை அரசு மற்று அரசு உதவி பெறும் 10 மற்றும் 11ஆம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இடைநிலை முற்றிலும் தவிர்க்கப்பட்டு,தவிர்க்கும் பொருட்டு சிறப்பு கல்வி வகுப்பு தொகையாக 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தலா ரூபாய் 1500, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தலா ரூபாய் 2000 ம் அவர்களின் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்யப்பட்டு அவர்கள் படிப்பை முடிக்கும் பொழுது அத்தொகை அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

சத்துணவு திட்டம் 1 முதல் 10 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது.

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்தாலும் அல்லது நிரந்தரம் முடக்கமடைந்தாலோ அதனால் பாதிக்கப்படுகின்ற அவரின் குழந்தைகளுடைய பள்ளி கல்வி எந்த விதத்திலும் தடைபிடாமல் இருக்க கல்வி உதவித் தொகையாக ரூபாய் 75,000 பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளியிலோ அல்லது பள்ளி சார்ந்த செயல்பாடுகளின் பொழுது எதிர்பாராத விபத்தினால் மரணம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 1,000,00 மும், பெரிய காயம் அடைந்தவருக்கு ரூபாய் 50,000 எனவும் சிறிய காயங்களுக்கு ரூபாய் 25000 எனவும் மாணவன் குடும்பத்தாருக்கு நிவாரண நிதி தொகை வழங்கப்படுகிறது.

கல்விக்காக மேற்கண்ட இவ்வளவு உதவிகளை செய்து வரும் அரசு மேலும் பல நலத்திட்டங்களை கல்விக்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டில்( 2025 – 26 ) அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே மாணவர்கள் சேர்க்கை வேகமாக நடந்து வருகிறது.நேற்று வரையிலான தகவலின் படி 3,12,881 மாணவ மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் இதுவரை சேர்க்கப்பட்டு இருக்கின்றனர்

இதில் மழலை வகுப்புகளில் ( Lkg, ukg ) 22,757 பேரும், 1ம் வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் 1,72,676 பேரும்,ஆங்கில வழிக் கல்வியில் 52,057 பேரும், 2 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையில் 65,391 பேரும் என மொத்தம் 3,12,881 மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் இதுவரை சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

இது கடந்த 2024 – 25 ஆம் கல்வி ஆண்டு சேர்க்கையை விட 11,119 மாணவர்கள் குறைவாக சேர்க்கப்பட்டு இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு அரசுப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை 3,24, 000 ஆகும். மேலும் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை இன்னும் இரண்டு மாதங்கள் காலம் வரை நீடிக்கும் என்பதால் இந்த 2025 -26 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களின் சேர்க்கை கடந்த ஆண்டு விட அதிகரிக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது..

இருந்தாலும் இன்னும் இரண்டு மாதங்கள் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில்
மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இதுவரை மாணவர்களின் சேர்க்கை 11,119 குறைவாக உள்ளது.பள்ளி திறந்து 2 வாரங்களை கடந்து இருப்பதனால் இன்னும் இரண்டு மாதங்களில் 11,119 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவார்களா? கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேர்க்கை விகிதம் அதிகரிக்குமா என்பது சந்தேகமே!

இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 17,985 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்,

மாணவர்களின் சேர்க்கையில் கடைசி இடத்தில் நீலகிரி மாவட்டம்உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 1327 மாணவர்களே அரசுப்பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம் இலவச உணவு திட்டம், (முக்கியமாக காலை உணவு )இலவச பேருந்து சலுகையும், சீருடைகள் மேலும் ஆங்கில வழிக் கல்வியும் முக்கிய காரணமாகும்.

முக்கியமாக காலை உணவு திட்டம் நகரங்களில் குறிப்பாக மாநகராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை வழங்கப்படாமல் இருக்கிறது.அதுவே அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை  அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.