தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார்
தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தருவை மைதானத்தில் காலை 9 மணிக்கு தொடங்கியது.
நிகழ்ச்சியில் வீரர்களுக்கு விளையாடுவதற்கான சீருடை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
வீரர்களுக்கான உற்சாக உரையினை சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் வீரர்கள் எவ்வாறு ஆட வேண்டும், எவ்வாறு பணி சுமை இல்லாமல் சிறப்பாக பணி செய்ய வேண்டும் அதற்கெல்லாம் விளையாட்டு ஒரு முக்கியமான கருவி என்று வாழ்த்திப் பேசினார்.
இந்த போட்டியில் 10 அணியினர் பங்கு பெற்றார்கள்.
போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு ஆசிரியர் செல்வின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஒருங்கிணைத்து நல் முயற்சியோடு அமைச்சருடைய ஒத்துழைப்போடு நடத்தினார்.
அவருடன் துணை நின்று ஆசிரியர் அமீர்தராஜ், ரஞ்சித் குமார் செயலாற்றினார்கள்.
நிகழ்ச்சியை ஆசிரியர். பெனிட்டன் தொகுத்து வழங்கினார்.












