+2 வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் : நாளை பிற்கல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
நடைபெறவுள்ள ஜூன் /ஜூலை மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்தத்
தனித்தேர்வர்கள் ( தத்கல் உட்பட ) தங்களது தேர்வுக் கூட நுழைவு சீட்டுகளை 19.06.2025 ( வியாழக்கிழமை ) அன்று பிறப்பால் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் “ HALL TICKET ” என்ற வாசகத்தினை கிளிக் செய்தால் பக்கத்தில் தோன்றும் ” HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM , JUNE / JULY 2025 – HALL TICKET DOWNLOAD என்று வாசகத்தினை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து , அவர்களுடையது தேர்வு கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.












