அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் மீது பள்ளிக் கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கை
2024 -2025 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3 ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வு முடிவுகள் மே 8 ம் தேதி வெளியானது.
இந்த தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 254 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்,தேர்வு முடிவில் 107 மாணவர்கள் தோல்வி அடைந்தனர்.
இந்த நிலையில் தான் இந்த வருடம் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 58% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று மாவட்டத்திலேயே கடைசி இடத்திற்குச் சென்றது. இதில் 12 ம் வகுப்பில் 107 மாணவர்கள் தோல்வியடைந்தனர். இதேபோன்று 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 107 மாணவர்களில் 36 மாணவர்கள் தோல்வியடைந்து 66% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 59% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். 99 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதமும் குறைந்து மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் பின்னுக்கு தள்ளப்பட்டது.
இதன் காரணமாக பள்ளி நிர்வாகத்தை மாற்றி அமைக்க வேண்டும், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறந்தாங்கி வர்த்தக சங்கம், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் பள்ளியில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மாவட்ட
கல்வி நிர்வாகம், மாவட்ட கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களிடையே தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு விசாரணை முடிவில் 7 ஆசிரியர்களை பணி மாற்றம் செய்தும் ஒரு ஆசிரியரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட முதன்மு கல்வி அலுவலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்
இதில் முதுநிலை ஆசிரியர் 3 பேர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் 4 பேர் என மொத்தம் 7 ஆசிரியர்கள்.
இந்த நடவடிக்கை ஆரிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அரசு மாதிரி பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியதும் தற்போது நடவடிக்கை எடுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வீடியோ நன்றி பாலிமர் டிவி












