தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்

தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்

தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதாபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தாளாளர் அருட்சகோதரி,பெர்னதெத் மேரி, மற்றும் பள்ளித்தலைமையாசிரியை அருட்சகோதரி. சகாய ஹேமலதா ஜெயந்தி தலைமை தாங்கினரா.

மரக்கன்றுகள் துணிப்பைகள் கொடுத்து விழா சிறப்பிக்கப்பட்டது. ஒன்பதாம் வகுப்பு பசுமைப்படை மாணவிகள் ஹன்சிகா, ஸ்ரீ ஹரிணி,மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவிகள் நாக பிரதிக்ஷா. மரிய வியாகுல ஜெஸி சொற்பொழிவு,உரையாடல்,பாடல், கவிதை மற்றும் பாவனை நடிப்பு மூலமாக சிறப்பித்தார்கள்.

மேலும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகள் சுற்றுச்சூழல் தினத்தன்று மரக்கன்றுகளை தாளாளர் மற்றும் தலைமையாசிரியருக்கு வழங்கினர்.

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமைப்படை மாணவிகளுக்கும், விளையாட்டுத் துறையில் உள்ள மாணவிகளுக்கும். பெற்றோர்களுக்கும் LE DIVIN ARCHITECTS பொறுப்பாளர் ஜீன் பிரபு அவர்கள் மாணவிகளுக்கு T SHIRT வழங்கினார்.

உறுதிமொழி

பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து மாணவிகளும் நெகிழி பாட்டில், நெகிழி பைகளைத் தவிர்த்து துணிப்பைகளையும், எவர்சில்வர் பாட்டில்களையும் கொண்டு வருவோம் என்று உறுதிமொழி எடுத்தனர். பின்னர் பசுமைப்படை மாணவிகள் “நெகிழி மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதலை பற்றி வீர முழக்கமிட்டு உறுதிமொழி எடுத்தனர் .

அவர்கள், பசுமை தலைமையாசிரியை படை ஒருங்கிணைப்பாளர் சகாய ஆனந்தி விண்ணரசியையும்,மாணவிகளையும் பாராட்டினார்கள்.