மாணவர்களுக்கு தேவைப்பட்டால் மாஸ்க் அணிய உத்தரவிடப்படும்

மாணவர்களுக்கு தேவைப்பட்டால் மாஸ்க் அணிய உத்தரவிடப்படும்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் வீரியம் இல்லாமல் உள்ளது.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு தேவைப்பட்டால் மாஸ்க் அணிவதற்கு உத்தரவிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

மேலும் பயமுறுத்தலாகவோ, அச்சுறுத்தலாகவோ இல்லாத பட்சத்தில் யாரும் பயப்பட தேவையில்லை என்று திருச்சியில் நிருபர்களிடம் கூறினார்.