தூத்துக்குடி வ. உ. சி. கல்வியியல் கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமையை உபயோகிக்கும் வழிமுறைகள் பற்றிய கருத்தரங்கம்
தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் அக தர நிர்ணயக் குழு சார்பாக அறிவுசார் சொத்துரிமையை உபயோகிக்கும் வழிமுறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் 29.05.2025 இன்று நடத்தப்பட்டது.
அக தர நிர்ணயக் குழு ஒருங்கிணைப்பாளர் உதவிப் பேராசிரியர் முனைவர். குரு வாசுகி(பொருளறிவியல் துறை)அனைவரையும் வரவேற்றார்.
முதல்வர் முனைவர்.கனகராஜ் தலைமையுரை நிகழ்த்தினார். சுிறப்பு விருந்தினராக வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பொருளாதாரத் துறை இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் (ஓய்வு) முனைவர்.காந்திமதிநாதன், மாணவ ஆசிரியர்களுக்கு அறிவுசார் சொத்துரிமையை அறிந்திருத்தல் மற்றும் உபயோகிக்கும் முறைகளை தகுந்த உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். மாணவ ஆசிரியர்கள் கேள்விகள் மூலம் தங்களது சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றுதுடன் பின்னூட்டமும் வழங்கினர்.
அக தர நிர்ணயக் குழு துணை ஒருங்கிணைப்பாளர், உதவிப் பேராசிரியர் முனைவர். அல்லிமுத்து ( உயிரறிவியல் துறை) நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனைவர். குரு வாசுகி மற்றும் முனைவர் அல்லிமுத்து, ஆகியோர் முதல்வர் வழிகாட்டுதலுடன் செய்திருந்தனர்.













