தூத்துக்குடியில் சிறுவர்களுக்கான திறன் வளர்த்தல் பயிற்சி நடைபெற்றது
தூத்துக்குடியில் சிறார்களுக்கு ஆட்டம் ஓவியம் காகிதத்தில் பொம்மை செய்தல் பாட்டு பயிற்சி கதை புத்தகம் வாசித்தல் போன்ற திறன் வளர்த்தல் பயிற்சி அழகப்பா கல்வி மையம் மாடியில்நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குமிழ் முனை புத்தக வண்டி நிறுவனர் சைமன் தலைமை வகித்தார்.
சிறார்களுக்கு பாட்டு பயிற்சி மற்றும் பேப்பரில் பொம்மை செய்யும் பயிற்சியை
கலை வளர்மனி சக்திவேல் அளித்தார்.
ஓவியப் பயிற்சியை ஜெயந்தி சக்திவேல், கதை சொல்லும் பயிற்சியை எழுத்தாளர் மாரி முத்து அளித்தார்கள்..
பாட்டு பயிற்சியை நாட்டுப்புற கலைஞர் பாமா அளித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை செல்வி போர்ஜியா மற்றும் குமிழ்முனை புத்தக வண்டி நிறுவனர் சைமன் செய்திருந்தனர்.












