பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு இன்று ( மே 22 ) முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை 4 முதல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த மே 16ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக மறு வாய்ப்பு வழங்கும் வகையில் துணை தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இத்துணை தேர்வுக்கு இன்று மே 22 ம் தேதி வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஒஒ10 ம் வகுப்பு 11ஆம் வகுப்பிற்காண துணைத்தேர்வு ஜூலை 4 முதல் ஜூலை 11 வரை நடைபெற இருக்கிறது.
பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், தேர்வுக்கு வருகை புரியாத தேர்வர்கள், துணைத் தேர்வு எழுத மே 22 காலை 11 மணி முதல் ஜூன் 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
பள்ளியில் பயின்ற மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும். தனித்தேவர்கள் மாவட்ட வாரியாக அரசு தேர்வுகள் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக் கட்டணம்
இணைய பதிவு கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும்.அனுமதி கட்டணம் 10 ம் வகுப்புக்கு சிறப்பு அனுமதி கட்டணம் ரூபாய் 500 ஆகவும், 11ஆம் வகுப்புக்கு ரூபாய் 1000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் முழுமையான அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு அட்டவணை
துணை தேர்வுக்கான கால அட்டவணை அரசு தேர்வு சேவை மையங்களின் விவரங்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in
என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது












