12 ம் வகுப்பு வணிகவியல் ( காமர்ஸ் ) தேர்ச்சி பெற்றவர்களும் பாலிடெக்னிக் நேரடி இரண்டாம் ஆண்டு சேரலாம்
காமர்ஸ் மாணவர்களும் +2 பொதுத் தேர்வில் வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் 2025- 2026 ஆம் கல்வியாண்டில், பாலிடெக்னிக்கில் நேரடி 2 ஆம் ஆண்டு (Lateral Entry) சேர முடியும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
கணிதம் – அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள் மட்டுமே பாலிடெக்னிக்கில் நேரடியாக 2 ஆம் ஆண்டு சேர முடியும் என்ற முறை தளர்த்தப்பட்டு, அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் சேரலாம் என விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுவரை, கணிதம், இயற்பியல், வேதியியல் படித்தவர்கள் மட்டுமே டிப்ளமோ படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது, இனி காமர்ஸ் மாணவர்களும் நேரடியாக டிப்ளமோ இரண்டாம் ஆண்டில் சேரலாம் என்றும் கூறப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.














