இன்று மே13,முக்கிய நிகழ்வுகள்
1515 – பிரான்சு அரசி மேரி டூடோர், சபோல்க் பிரபு சார்லசு பிரான்டனை கிரேனிச்சு நகரில் அதிகாரபூர்வமாகத் திருமணம் புரிந்தார்.
1568 – ஸ்காட்லாந்தின் முதலாளம் மேரியின் படைகள் லாங்சைடு என்ற இடத்தில் நடந்த சமரில் அவளது உடன்பிறப்பான யேம்சு ஸ்டுவர்ட்டின் இசுக்கொட்லாந்திய சீர்திருத்தத் திருச்சபைப் படைகளிடம் தோற்றன.
1648 – தில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.
1656 – ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடம் இருந்து கொழும்பைக் கைப்பற்றினர்.[1]
1765 – யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டார்.[2]
1787 – ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் கொண்டு கப்டன் ஆர்தர் பிலிப் இங்கிலாந்து போர்ட்ஸ்மவுத் துறையை விட்டுப் புறப்பட்டார்.
1830 – எக்குவாடோர் கொலம்பியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1846 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ மீது போரை அறிவித்தது.
1861 – பெரும் வால்வெள்ளி ஒன்று ஆஸ்திரேலியாவில் வின்சர் நகரில் அவதானிக்கப்பட்டது.
1861 – பாக்கித்தானில் முதலாவது தொடருந்து சேவை கராச்சி முதல் கோத்ரி வரை ஆரம்பிக்கப்பட்டது.
1880 – நியூ செர்சியில் மென்லோ பூங்காவில் தாமசு ஆல்வா எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார்.
1888 – பிரேசில் பேரரசு அடிமைமுறையை இல்லாதொழித்தது.
1939 – முதலாவது எஃப்எம் வானொலி நிலையம் ஐக்கிய அமெரிக்காவில் கனெடிகட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் இராணுவம் மியூசே ஆற்றைத் தாண்டி பிரான்சினுள் புகுந்தது. முற்றுகை ஆரம்பமானது.
1940 – இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தினுள் நாட்சி ஜெர்மனியர் புகுந்ததை அடுத்து அதன் அரசி வில்லெல்மினா பிரித்தானியாவுக்கும் இளவரசி ஜூலியானா தனது குழந்தைகளுடன் கனடாவுக்கும் தப்பி ஓடினர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: வட ஆப்பிரிக்காவில் செருமனிய, இத்தாலியப் படையினர் கூட்டுப் படைகளிடம் சரணடைந்தனர்.
1952 – இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.
1954 – சிங்கப்பூரில் தேசியத்துக்கு எதிராக சீனப் பாடசாலை மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றது.
1958 – அல்ஜியர்சில் பிரெஞ்சு இராணுவ அதிகாரிகள் சிலர் இராணுவப் புரட்சியில் ஈடுபட்டனர்.
1960 – உலகின் ஏழாவது உயர மலையான தவுளகிரியின் உச்சியை சுவிட்சர்லாந்து மலையேறிகள் இருவர் முதன் முதலில் அடைந்தனர்.
1967 – சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார்.
1969 – மலேசியாவில் கோலாலம்பூரில் சீன மலேசியர்களுக்கும் மலே இனத்தவர்களுக்கும் இடையில் இனக்கலவரம் மூண்டது. 190 பேர் கொல்லப்பட்டனர்.
1971 – வங்காளதேசம், தெம்ரா நகரில் 900 இற்கும் அதிகமான வங்காள இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1972 – சப்பான், ஒசாக்காவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 118 பேர் உயிரிழந்தனர்.
1981 – ரோம் நகரில் புனித பேதுரு சதுக்கத்தில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் திருத்தந்தை காயமடைந்தார்.
1985 – பிலடெல்பியாவில் மூவ் என அவைக்கப்படும் கறுப்பின விடுதலைக் குழு ஒன்றின் தலைமையகம் மீது காவல்துறையினர் குண்டு வைத்துத் தகர்த்ததில், ஐந்து சிறுவரக்ள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
1996 – வங்காள தேசத்தில் வீசிய கடும் புயலில் சிக்கி 600 பேர் வரையில் இறந்தனர்.
1997 – இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.[3]
1998 – இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சீனர்களுக்கெதிராக இனக்கலவரம் ஆரம்பமானது.
1998 – இந்தியா மே 11 இற்குப் பின்னர் மேலும் இரண்டு அணுகுண்டுச் சோதனைகளை மேற்கொண்டது. இந்தியா மீது ஐக்கிய அமெரிக்கா, மற்றும் சப்பான் பொருளாதாரத் தடையைக் கொணர்ந்தன.
2005 – உஸ்பெக்கிஸ்தானில் அண்டிஜான் என்ற இடத்தில் காவற்துறையினர் போராட்டக் காரர் மீது சுட்டதில் 187 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – அல்லைப்பிட்டிப் படுகொலைகள்: யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் படுகொலை செய்தனர்.
2006 – திமுக தலைவர் மு. கருணாநிதி 5வது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.
2007 – திருகோணமலை மொறவேவாப் பகுதியில் பொங்குதமிழ் உட்படப் பலநிகழ்வுகளில் முன்னின்று கலந்துகொண்ட வணக்கத்துக்குரிய நந்தரத்ன தேரோ இனம் தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.
2011 – பாக்கித்தானில் சார்சாதா மாவட்டத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில், 98 பேர் கொல்லப்பட்டனர், 140 பேர் காயமடைந்தனர்.
2014 – துருக்கியில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 301 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
2018 – இந்தோனேசியாம் சுராபாயாவில் மூன்று கிறித்தவத் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
நன்றி விக்கிபீடியா 🙏












