பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த 70 வயது மூதாட்டி

                                               பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த 70 வயது மூதாட்டி

நடந்து முடிந்த 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் கோவையைச் சேர்ந்த ராணி (வயது 70 ). இவருக்கு  கணவர் இல்லை. வீட்டில் தனியாக இருந்த ராணி படிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளார்.  இதனால் வீட்டில் இருந்தபடியே பன்னிரண்டாம் வகுப்புக்கான பாடங்களை படித்து தேர்வில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த எட்டாம் தேதி வெளியானது அதில் ராணி 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழில் அதிகபட்சமாக தமிழில் 89 மதிப்பெண்கள் பெற்றுள்ள ராணி ஆங்கிலத்தில் 50 மதிப்பெண்களும், வரலாறு பாடத்தில் 52 மதிப்பெண்கள் என மொத்தம் 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.