+2 பொதுத்தேர்வில் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம்
தேர்ச்சி பெற்றுள்ளது. மொத்தம் 207 மாணவிகள் தேர்வு எழுதினர் அதில் 207 மாணவிகளும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளார்கள்.
இதில் மாணவி மிஸ்டிகா 580 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்திலும், பவித்ரா 576 மதிப்பெண்களும், இசக்கி சரண்யா 572 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
100/100 பெற்ற மாணவியர்கள்
கணக்கு பதிவியல் – பவித்ரா, இசக்கி சரண்யா
பொருளியல் – மிஸ்டிகா, ராஜேஸ்வரி
கணினி பயன்பாட்டியல் – பவித்ரா, ஹமிதா பானு
தட்டச்சு – மகாலட்சுமி
தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளி புரவலர் அன்னை ஜீவல்லர்ஸ் விநாயக மூர்த்தி, பள்ளி தாளாளர் ராஜசேகரன், தலைமை ஆசிரியர் பொன் சந்தண லதா மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மாணவிகளை பாராட்டினார்கள்.












