அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடா? திட்டமிடுகிறது தமிழக அரசு

                                              அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடா?
                                                                                             திட்டமிடுகிறது தமிழக அரசு

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இலவச கல்வி திட்டம், மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, இலவச பேருந்து பயணம், காலை, மதிய உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

தற்போது மேலும் ஒரு மைல் கல்லாக தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் தற்போது 7.5% உள்ள இட ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இட ஒதுக்கீடு உயர்வு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றார் தமிழக சுகாதாரத்தறை அமைச்சர் சுப்பிரமணியம்.