இன்று மே 4, சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்

போட்டோ நன்றி விகடன்

                         இன்று மே 4, சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 4 ம் தேதி அனைத்து தீயணைப்பு வீரர்களுக்கும் அவர்களது தன்னலமற்ற சேவையின் பங்களிப்புக்கும் விதிவிலக்கான தைரியத்திற்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.

1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ம் தேதி 5 தீயணைப்பு வீரர்கள் ஆஸ்திரேலியாவின் புதர்ச் செடியின் தீயில் மாட்டிகொண்டு இறந்த சோக நிகழ்வுகள் காரணமாக உலகம் முழுவதும் கடிதம் அனுப்பப்பட்டு கோரிக்கை விடுத்ததன் விளைவாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தில் நாடாக்களில் தீயணைப்பு வீரர்களின் பணிகளோடு சம்பந்தப்பட்ட முக்கிய கூறுகள் கூறுகளை அடையாளப்படுத்தும் விதமாக தண்ணீருக்கான வண்ணமாக ஊதாவும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்கள் அவசர சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய தீ விபத்து

1991 வளைகுடாப் போரின் போது, ஈராக் படைகள் குவைத்தில் 700 எண்ணெய் கிணறுகளுக்கு தீ வைத்தது. இது மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய தீ விபத்து ஆகும்.

சிகாகோ தீ:

1871 இல் சிகாகோவில் ஏற்பட்ட தீ விபத்து, பல வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களை எரித்து சாம்பலாக்கியது.