தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மேலூரில் சாரோன் தொண்டு நிறுவனத்தின் சார்பில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து பரிசும் இனிப்பும் வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
தொண்டு நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி நற்செய்திகளை எடுத்துக் கூறினர்.
மேலும் பள்ளியில் தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள்
பிரகதீஷ் 121
பவானி 118
அபிஷேக் 110
தாரிகா 93 ஆகியோருக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களான உலகம்மாள்,
முத்துக்குமாரி ஆகியோருக்கும் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி கலந்துகொண்டு பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்தினார்.
விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பிரேமா ஆனந்தி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். மேலும் உதவி தலைமை ஆசிரியர் அந்தோணி மைக்கேல் நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
விழாவின் இறுதி நிகழ்வாக பள்ளியில் மாற்றுப் பணியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் கலைவாணி பட்டதாரி ஆசிரியர் தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெள்ளி பரிசுப் பொருள் வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.













