புத்தகம் வாசிப்பு விழிப்புணர்வு முகாம் :

தூத்துக்குடி கோரம்பள்ளம் சேகரம் தூய மிகாவேல் ஆலயம் முன்பு
வ.உ. சிதம்பரம் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் பிரிவு 68 மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றம் இணைந்து நடத்தும் புத்தகம் வாசிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ராமகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு
வ. உ. சிதம்பரம் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டம் பிரிவு 68 திட்ட அலுவலர் டாக்டர் ஆரோக்கிய செல்வ சுந்தரி தலைமையில்
கோரம்பள்ளம் சேகரம் தூய மிகாவேல் ஆலய சேகர குருவானவர் வெல்லிங்டன் ஜோசப் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

தொடர்ந்து
வ.உ சிதம்பரம் கல்லூரி நாட்டு நல பணி திட்ட மாணவிகள் புத்தகம் வாசிக்க சொல்லுங்கள் என்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று வழங்குகினார்கள். கவிஞனும் கவிதையும் என்ற புத்தகத்தை பற்றி பேசினார்
லட்சுமி லாவண்யா Bsc முதலாம் ஆண்டு மாணவி.

அடுத்ததாக
கேள்விக்குறி என்ற புத்தகத்தை பற்றி பேசினார் கலை வளர்மணி சக்திவேல் கலையின் குரல் நிறுவனர்
ரயிலேறிய கிராமம் என்ற புத்தகத்தை பற்றி பேசினார் எழுத்தாளர் மாரிமுத்து.

கடைசியாக குமிழ்முனை புத்தக வாசிப்பு வண்டி நிறுவனர் . வாசிப்பின் அவசியம் பற்றி பேசினார். தொடர்ந்து மாணவி நன்றியுரையாற்றினார்.அதனை தொடர்ந்து குழு விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது.