தூத்துக்குடி மாவட்ட அளவிலான யோகா போட்டி :
வடக்கு பத்திரகாளியம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவன் 2 ம் இடம் !

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முதலாம் வகுப்பு மாணவன் லஷ்வின் விநாயக் மாவட்ட அளவிலான sports and cultural Association நடத்திய யோகா போட்டியில் பங்கு கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

மாணவனுக்கு அசோசியேசன் சார்பில் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டப்பட்டுள்ளார்.மேலும் மாணவன் லஷ்வின் விநாயக் – ஐ இன்று பள்ளியில் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் பாராட்டி சிறப்பித்தனர்.












