12 ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு : CLAT,UCEED மற்றும் NID தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் !

12 ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு :
CLAT,UCEED மற்றும் NID தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் !

CLAT மற்றும் UCEED தேர்விற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாளாகும்.

அதேபோல் NID தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி நவம்பர் 30 ஆகும்.

தேர்வு பற்றிய விவரங்கள்:

CLAT (Common Law Admission Test – பொதுச் சட்ட நுழைவுத் தேர்வு) என்பது இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் (National Law Universities – NLUs) சட்டப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும்.
இது பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்:

முக்கியப் படிப்புகள்

• இளங்கலை (UG): 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளான BA LLB, BBA LLB போன்றவற்றில் சேர.
• முதுகலை (PG): LLM (சட்ட முதுகலை) படிப்புகளில் சேர.

UCEED (Undergraduate Common Entrance Examination for Design) – என்பது இந்தியாவின் முன்னணி ஐஐடி (IIT) நிறுவனங்கள் மற்றும் பிற முக்கியக் கல்வி நிறுவனங்களில் B.Des (Bachelor of Design – வடிவமைப்பு இளங்கலை) பட்டப்படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு ஆகும்.
இந்தத் தேர்வு IIT Bombay போன்ற ஐஐடி நிறுவனங்களால் நடத்தப்படுகிறது.

NID – தேர்வு என்பது இந்தியாவின் முன்னணி வடிவமைப்பு கல்வி நிறுவனமான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் (NID) நடத்தும் NID DAT (Design Aptitude Test – வடிவமைப்பு திறனறித் தேர்வு ஆகும்.

இந்தியாவில் உள்ள NID வளாகங்களில் B.Des (இளங்கலை வடிவமைப்பு) மற்றும் M.Des (முதுகலை வடிவமைப்பு) படிப்புகளில் சேர இந்தத் தேசிய அளவிலான தேர்வு நடத்தப்படுகிறது

கல்வித் தகுதி

12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் அனைத்துப் பிரிவுகளிலும் (Science, Commerce, Arts & Humanities) தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அல்லது அந்த ஆண்டில் தேர்வு எழுதுபவர்கள் மேற்கண்ட 3 தேர்வினையும் எழுதத் தகுதியுடையவர்கள்.

மேலும் இந்த தேர்வுகளைப் பற்றிய விவரங்கள் அறிய அழைக்கவும் 👇👇

முனைவர்.M.S.ஜாகிர் உசைன் ME.,MBA., ( Ph.D)

“தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஊக்கப் பேச்சாளர்” ( Career Guidance Expert & Motivation Speaker)

மொபைல் – 98423 – 76822 .