11 ம் வகுப்பு மாணவர்கள் இனி ஹீரோதான் :
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஹீரோ சூப்பர் சைக்கிள் !
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் சைக்கிள் வழங்கத் திட்டத்தில் சைக்கிள் விலை கொள்முதல் செய்ய ஹீரோ சைக்கிள் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவருக்கான சைக்கிள் 7,235 ரூபாய், மாணவிகளுக்கான சைக்கிள் 7,476 ரூபாய் என வழங்கப்பட உள்ளது.

மொத்தம் 5 லட்சத்து 32 ஆயிரத்து 388 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டத்திற்கு தமிழக அரசு ஏற்கனவே 277 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில் தற்போது கூடுதலாக 115 கோடியை ஒதுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
என்ன இனி ஹீரோ சைக்கிளில் வலம் வரும் மாணவர்கள் ஹீரோதானே !












