*கனமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை!*

*விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விபரம்:*
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்த சூழ்நிலையில், இன்றும் நள்ளிரவில் இருந்து மழை விடாமல் பெய்து வந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் இன்று (22-10-2026) வியாழக்கிழமை 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை:*
– திருநெல்வேலி
– தூத்துக்குடி
– கன்னியாகுமரி
– தென்காசி
– திருப்பத்தூர்
* புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை:*
– புதுச்சேரி (பள்ளிகளுக்கு விடுமுறை)
– காரைக்கால் (பள்ளிகளுக்கு விடுமுறை)
* குறிப்பு:*
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ராஜராஜ சோழனின் சதய விழா மற்றும் முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












