நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பளுதூக்கும் போட்டியில் கே.ஆர். கல்லூரி மாணவிகள் முதலிடம் !
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான பெண்களுக்கான பளுதூக்கும் போட்டி, இன்று 15-10-2026 கோவில்பட்டி G.V.N கல்லூரியில் நடைபெற்றது.
இப் போட்டியில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த பல்வேறு கல்லூரி அணிகள் கலந்து கொண்டனர்.
இதில் கோவில்பட்டி கே.ஆர். கல்லூரி மாணவி செண்பகவல்லி 69 கிலோ எடை பிரிவில் ஸ்னாட்ச் (snatch) 81 கிலோ மற்றும் ஜெர்க் (Jerk) 96 கிலோ என மொத்தம் 177 கிலோ எடையைத் தூக்கி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார்.
மேலும் மாணவி மீராலெட்சுமி 77 கிலோ எடை பிரிவில் ஸ்னாட்ச் (snatch) 40 கிலோ மற்றும் ஜெர்க் (Jerk) 50 கிலோ என மொத்தம் 90 கிலோ எடையைத் தூக்கி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார்.

மாணவி தங்கதர்ஷினி 57 கிலோ எடை பிரிவில் ஸ்னாட்ச் (snatch) 40 கிலோ மற்றும் ஜெர்க் (Jerk) 47 கிலோ என மொத்தம் 87 கிலோ எடையைத் தூக்கி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார்.
மாணவி மாளவிகா 49 கிலோ எடை பிரிவில் ஸ்னாட்ச் (snatch) 28 கிலோ மற்றும் ஜெர்க் (Jerk) 38 கிலோ என மொத்தம் 66 கிலோ எடையைத் தூக்கி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார்.
கே.ஆர். கல்லூரி அணியினர் 134 புள்ளிகளை பெற்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் முதலிடம் பெற்றனர்.
பதக்கம் பெற்ற மாணவிகளை கல்லூரியின் தலைவர், துணைத் தலைவர், , கல்லூரி தாளாளர், முதல்வர் , உடற்கல்வி இயக்குனர், பயிற்சியாளர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டினர்.












