hதூத்துக்குடி தஸ் நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி :
மாணவிகள் படைப்புகளை காட்சிப்படுத்தினர் !

தூத்துக்குடி தஸ் நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று 13 – 10 – 2026 செவ்வாய்க்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மாணவிகளின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்ட இக்கண்காட்சியை கல்விச் செய்திகள் டாட் காம் செய்தி ஆசிரியர் பொன் பலவேச ராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் அருட் சகோதரி முனைவர்.சிறுமலர் மற்றும் தலைமை ஆசிரியை அருட் சகோதரி ஹேமலதா ஜெயந்தி முன்னிலை வகித்தனர்.

இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமான கண்காட்சியில் மாணவிகள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலை மையப்படுத்தி பல்வேறு படைப்புகள் வைக்கப்ட்டிருந்தது.

தண்ணீரை சுத்தப்படுத்துவது எப்படி,தானாக எரியும் தெரு விளக்குகள், எரிமலை உருவாவது எப்படி, இதயம்,நுரையீரல் மற்றும் சிறுநீரகம் எவ்வாறு செயல்படுகிறது, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள தீமைகள், காடுகளின் நன்மைகள், விலங்குகளின் நன்மைகள் அவற்றை பாதுகாத்தல்,பவளப் பாறைகள்,நட்சத்திர மீன்கள், கடல் அட்டை, சங்குகள்,நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே கண்டறியும் கருவி, வீட்டிற்குள் நுழையும் அந்நியர்கள் குறித்து கண்டறியும் கருவிகள், கலங்கரை விளக்கம் அதன் நன்மைகள், முட்டை குஞ்சு பொரிக்கும் இன்குபேட்டர், கணிதம் சமன்பாடுகள், ஏடிஎம் மெஷின்களின் செயல்பாடுகள் , மழை பெய்வதை தெரிவிக்கும் கருவி,செயற்கை மழையை உருவவாக்குவது எப்படி என்று 60 க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தி அதன் செயல்பாடுகளையும் விளக்கியது ஆச்சரியப்படுத்தும் விதமாக அமைந்தது.

ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்ததையும், யூடியூப் மற்றும் பிற இணையத்தில் இருந்து கற்று அதனை செய்முறைப் படுத்தியது பாராட்டுதலுக்குரியதாகும்.மேலும் மொபைல் போனை நல்ல விஷயத்திற்கு படுத்துவது மாணவிகளின் நல்லொழுக்கத்திற்கு அடையாளமாகத் திகழ்கிறது.

கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சொன்னார்.ஆனால் மாணவிகள் அதனை செயல்படுத்தியதை பார்த்தால் இன்றைய அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவிகளில் வருங்கால விஞ்ஞானிகள் ஒழிந்திருப்பது உறுதியாகிறது.

முன்னதாக வ.உ.சி.,அன்னம்மாள், செயின்ட் தாமஸ்,ரோசம்மாள் மற்றும் சாண்டி கல்வியியல் கல்லூரிகளின் ஆசிரிய மாணவிகள் மரக்கன்றுகளை வழங்கி மரங்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசுமைப் படை ஆசிரியை சகாய ஆனந்தி விண்ணரசி , ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

கண்காட்சியை மாணவிகளின் விளக்கங்களுடன் கண்டு களிக்க ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாகிறது என்பதை வைத்து மாணவிகளின் வெற்றி உறுதியாகிறது.














