கலைத் திருவிழா 2026–2037 :
தூத்துக்குடி மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 102 பேர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பு !
பள்ளி மாணவர்களின் கலை மற்றும் பண்பாட்டுத் திறமைகளை கண்டறிந்து, ஊக்குவித்து, மேம்படுத்தி வெளிக்கொணரும் நோக்கில், நுண்கலை, இசை, நடனம் மற்றும் நாடகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கலைத் திருவிழா 2026–27 போட்டிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்பட்டன.
மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 22.08.2026 மற்றும் 24.08.2026 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்டன.
மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்ட பல்வேறு அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 102 மாணவ, மாணவியர்கள் விழுப்புரம் மற்றும் தஞ்சாவூரில் நடைபெறும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்க செல்கின்றனர்.

– விழுப்புரம்: 52 மாணவர்கள் + 6 பொறுப்பு அலுவலர்கள்
– தஞ்சாவூர்: 50 மாணவர்கள் + 6 பொறுப்பு அலுவலர்கள் குழந்தைகள் இருவர்
– மொத்தம்: 116
மாநில அளவிலான போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பதற்கான நிகழ்வை தூத்துக்குடி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் முனைவர்.சங்கீதா சின்னராணி வழிகாட்டுதல் மற்றும் வாழ்த்துக்களுடன் துவங்கியது.

மேலும், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் செல்லும் அலுவலர்களின் பேருந்துகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளி சிதம்பரநாதன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். உடன் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவபிரசாத் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், சுடலைமுத்து, வளமிகு வட்டார ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் ஜான்சன் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் இருந்தனர்.












