பதூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில்
பட்டமளிப்பு விழா :
764 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தர் பிரபாகர் !

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான பட்டமளிப்புவிழா 25.09.2026 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது.
விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு வரவேற்புரை வழங்க,நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் ( பொறுப்பு ) முனைவர்.பிரபாகர் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தி மாணவ மாணவியர்களுக்குப் பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
அரசு உதவி பெறும் பாடப்பிரிவில் 551 மாணவ,மாணவியர்களும், அரசு உதவி பெறாத பாடப்பிரிவில் 244 மாணவ மாணவியர்களும் மொத்தம் 795 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 764 மாணவ,மாணவியர்கள் நேரில் பட்டங்களைப் பெற்றனர். இதில் பல்கலைக்கழக அளவில் 2 மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலர்,வ.உ.சி. கல்லூரிக் கல்விக் கழக உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
விழா நிகழ்ச்சியினைக் கல்லூரி நிர்வாகம், முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் இணைந்து செய்திருந்தனர்.












