கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பு குறித்த தொழில் வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பு குறித்த தொழில் வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் (தொழில் சார் கணக்கு வைப்புமுறை) துறை, இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம் – மதுரை கிளை இணைந்து கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பு குறித்த தொழில் வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை 10.09.2026 அன்று நடத்தினர்.

இந் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். துறைத் தலைவர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார் .உயிர் வேதியியல் துறைத் தலைவர் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக பரமசிவம், தலைவர், ராஜா, மூத்த நிர்வாக உதவியாளர் இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம் – மதுரை கிளை மற்றும் முனைவர்.சுப்ரமணியன், இயக்குநர், மேலாண்மை கல்வி நிறுவனம், மதுரை ஆகியோர் கலந்து கொண்டு, நிறுவனச் செயலாளர் படிப்பு, அதன் முக்கியத்துவம், தொழில் முறை வாய்ப்புகள் மற்றும் மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து சிறப்புரையாற்றினர்.

இந் நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களுக்கு நிறுவனச் செயலாளர் படிப்பின் சிறப்பம்சங்கள், கல்வித் தகுதிகள், தொழில் முறைப் பயிற்சி மற்றும் பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், மாணவர்கள் தங்களது எதிர்காலத்தில் தொழில் முறை படிப்புகளைத் தேர்ந்தெடுத்து முன்னேறுவதற்கான வழி காட்டுதல்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினர்களுடன் கலந்துரையாடி, நிறுவனச் செயலாளர் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் தொடர்பான தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி வணிகவியல் (தொழில் முறை கணக்கியல்) துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.