தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் !

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் !

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பவர் ஹீலி தொண்டு நிறுவனம் நடத்துகின்ற இடைநின்ற மாணவர்களுக்கான உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் இன்று சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் கலந்து கொண்டு தலைமை ஏற்று, கொடியேற்றினார் .

மேலும் மாணவர்களிடையே உரையாற்றிய அவர் சுதந்திரத்திற்காக பாடுபட்ட போராட்ட வீரர்கள் குறித்து கருத்துக்கள் வழங்கி, மாணவர்களாகிய தங்களிடம் உள்ள திறனுக்கேற்றவாறு உள்ள திறமைகளை வளர்த்து அத் திறனில் மேம்பட்டவர்களாக வளர்த்து அந்த துறையில் மிகச் சிறந்தவர்களாக விளங்க பாடுபடவேண்டும், நாட்டுக்கு நல்லத் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு வாழ்த்துகள் கூறினார்.

ரிலாக்ஸ் கிரியேஷன் கிளப் மற்றும் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி அருண் முன்னிலை வகித்து, வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கான கனவுகளை காண வேண்டும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக மாணவர்களாகிய நீங்கள் பாடுபட வேண்டும் என்று கூறி வாழ்த்துக் கூறினார்.

ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் அல்போன்ஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் ஒழுக்கத்தை பற்றியும் எடுத்துக் கூறி சுதந்திர போராட்ட வீரர்களை நினைவில் கொண்டு அதுபோல நாமும் ஏதாவது ஒரு சாதனையை படைக்க வேண்டும் என்று கூறி அனைத்து மாணவர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை வழங்கினார்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது கலை நிகழ்ச்சியை கல்வி தன்னார்வலர் ஆசிரியர் ஆசிரியர் மாலா செய்திருந்தார்.

சுதந்திர தின அனைத்து நிகழ்வுகளையும் சிறப்பு பயிற்சி மையத்தின் நிர்வாகி. அருள் சகோதரி புனிதா செய்திருந்தார்.

அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன