கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 80 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் !

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 80 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் !

கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா 15-08-2026 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர்  ரமேஷ் வழிகாட்டுதலின் படி கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்க செயலாளர் ஜெயபாலன் விழாவிற்கு தலைமை வகித்து தேசியக் கொடியினை ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கச் செயலாளர் ஜெயபாலன், மற்றும் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் செல்வம் ஆகியோர் புறாக்களை பறக்கவிட்டனர்.

கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்க உறுப்பினர் ராஜேந்திர பிரசாத், பள்ளி செயலாளர் அட்வகேட் செல்வம், பள்ளிப் பொருளாளர் பாஸ்கரன்,பள்ளிக்குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், கண்ணன், செல்வம்,பொன்ராமலிங்கம்,ரவி மாணிக்கம் விழாவிற்கு வருகை தந்தனர்.

பள்ளி மாணவி தாரணி அனைவரையும் வரவேற்றார். விழா நிகழ்ச்சிகளை பள்ளி முதல்வர்.பிரபு, விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியை கனகராணி, பரமேஸ்வரி உட்பட இருபால் ஆசிரியர்களும் அலுவலக பணியாளர்களும் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் குழந்தைகள் பல்வேறு தேசத் தலைவர்களின் வேடமணிந்து பங்கேற்றனர்.

மேலும் குழந்தைகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடனம், பேச்சு, சிலம்பம், கராத்தே போன்றவைகள் இடம் பெற்றது. பள்ளி மாணவி அனுஜா அனைவருக்கும் நன்றியுரை கூறினார். விழா முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தேசியகீதத்துடன் சுதந்திர தின விழா நிறைவுற்றது.