தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகம் – முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் !

தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகம் – முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் !

ஆஸ்திரேலியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், இந்தியாவில் தனது வளாகத்தை சென்னையில் நிறுவ உள்ளது. இது தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகமாகும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு முதல்வர் விஜய் முன்னிலையில், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி திட்டம் மற்றும் தமிழ்நாட்டின் முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகத்தை நிறுவுவதற்காக முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

மேலும், உயர்கல்வித் துறையில், ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி சார்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்
1911 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது .

இந்தப் பல்கலைக்கழகம், QS உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2026-இல் 77 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை வேளச்சேரியில் சுமார் ரூ.125 கோடி முதலீட்டில் இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் 200-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.