தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் மகளிர் நல விழிப்புணர்வு நிகழ்ச்சி !
தூத்துக்குடி, வ.உ. சிதம்பரம் கல்லூரியின் மகளிர் ஆலோசனைக் குழுமத்தின் (Women’s Counselling Cell – WCC) சார்பில், முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்காக மகளிர் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (15.7.2026) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் கிருஷ்ணவேணி, (மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்) பெண்களின் உடல்நலம், நலவாழ்வு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை குறித்து பயனுள்ள சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சி கலந்துரையாடல் முறையில் நடைபெற்றது.

மாணவிகள் தங்களது உடல்நலம் தொடர்பான பல்வேறு சந்தேகங்களை நேரடியாகக் கேட்டுத் தெளிவுபெற்றனர். இந்நிகழ்ச்சி பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதுடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்திய மகளிர் ஆலோசனைக் குழுவின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.













