தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா:
தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று காமராஜரின் 123 வது பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, கவிதை வாசித்தல் ,பாடல் பாடுதல் ஆகியவற்றில் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.

விழாவிற்கு பள்ளியின் தூதுவர் நவநீதகிருஷ்ணன் மற்றும் திரவிய புரம் காமராஜர் நற்பணி மன்ற தலைவர், செயலர், பொருளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி ஆர்வமூட்டினர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு பள்ளியின் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தலைமையாசிரியை தலைமையில் பிற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.













