கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆதார் புதுப்பிக்கும் சிறப்புமுகாம் !
கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அணி எண்: 132 மற்றும் இந்திய அஞ்சல் துறையின் சார்பில் 08.07.2026 மற்றும் 09.07.2026 ஆகிய இரண்டு நாட்கள் ஆதார் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இம்முகாமினை கல்லூரி முதல்வர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதார் விவரங்களை புதுப்பித்துப் பயனடைந்தனர்.
இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தினர் வழிகாட்டுதலின்படி கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், நாட்டுநலப்பணித்திட்ட அணி மற்றும் மாணவ, மாணவியர்கள் செய்திருந்தனர்.












