மாணவர்களின் திறனை மேம்படுத்த தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் ஐஏஎஸ் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி மையம் துவக்கம்: கோவில்பட்டி துணை ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது !

மாணவர்களின் திறனை மேம்படுத்த தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் ஐஏஎஸ் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி மையம் துவக்கம்:
கோவில்பட்டி துணை ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது !

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி, சென்னை, கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து தூத்துக்குடியில் இந்திய ஆட்சி பணித் தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் பயிற்சி மையத்தின் துவக்க விழா நேற்று (6.7.2026) வ.உ.சிதம்பரம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழா நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, சென்னை கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி, உடன் செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் அரசுப்பணித் திறன்களை மேம்படுத்தும் மற்றொரு முயற்சியாகும்.

இப் பயிற்சி மையத்தின் துவக்க விழாவில் வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர். வள்ளியம்மாள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி, துணை ஆட்சியர் ஹிமான்சு மங்கள் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார். கிங் மேக்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குனர் பூமிநாதன் சிறப்புரையாற்றினார்.கிங்மேக்கர் ஐஏஎஸ் அகாடமியைச் சேர்ந்த பரத் நன்றியுரை வழங்கினார்.

விழாவில் மாணவ மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.