சோழபுரம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பாலிடெக்னிக் கல்லூரியில் புத்தாக்க திட்டத்தில் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி!
தூத்துக்குடி மாவட்டம் சோழபுரம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பாலிடெக்னிக் கல்லூரியில் புத்தாக்க திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி ஜூன் (27,29 மற்றும் 30) ஆகிய தேதிகளில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் சிறப்பு பயிற்சியாளராக பாண்டீஸ்வரன் (மேஜிக் பஸ் foundation, chennai ) கலந்துகொண்டு மாணவர்களுக்கு இயல்பு வாழ்க்கையில் AI பயன்பாடு குறித்த பயிற்சியை வழங்கினார்.

நிகழ்வில் வரவேற்புரையை கல்லூரி மின்னியல் மற்றும் மின்னனுவியல் பிரிவு பேராசிரியர் சரவணன் வழங்கினார்.
விழாவிற்கு கல்லூரியின் இயக்குனர் டாக்டர். பிரேமலதா தலைமை தாங்கினார். கல்லூரியின் துணை முதல்வர் தங்கமதியழகன் AI குறித்து சிறப்புரை வழங்கினார்.

இறுதியாகமின்னியல் மற்றும் மின்னனுவியல் பேராசிரியர் கார்த்திக் நன்றியுரை வழங்கினார்
இவ்விழாவில் கல்லூரி இயக்குனர், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.












