தி வீக் – 2026 சிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரிக்கு சிறந்த இடம்

தி வீக் – 2026 சிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு:
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரிக்கு சிறந்த இடம்!

தூத்துக்குடி, வ.உ. சிதம்பரம் கல்லூரி, தி வீக் சிறந்த கல்லூரிகள் தரவரிசை 2026-இல் சிறப்பான இடங்களைப் பெற்று, கல்வித் தரம் மற்றும் சிறப்பிற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது .

🏛️ கலைக் கல்லூரிகள் – 54-வது இடம் ⬆️ (கடந்த ஆண்டு: 56-வது இடம்)📊 மதிப்பெண்: 286

🔬 அறிவியல் கல்லூரிகள் – 48-வது இடம் ⬆️ (கடந்த ஆண்டு: 50-வது இடம்)📊 மதிப்பெண்: 229

💼 வணிகவியல் கல்லூரிகள் – 66-வது இடம் ⬆️ (கடந்த ஆண்டு: 69-வது இடம்)📊 மதிப்பெண்: 261

இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு கூறுகையில், நிர்வாகம், முதல்வர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் அர்ப்பணிப்பும், ஒருங்கிணைந்த உழைப்பும் பெற்ற வெற்றிக்குச் சான்றாகும்.

இந்த மகத்தான சாதனைக்கு பங்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.