CUET தேர்வு முடிவுகள் வெளியீடு!
CUET ( பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு) தேர்வு முடிவுகள் வெளியானது.
மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் (cuet) தேர்வு முடிவுகள் வெளியானதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
க்யூட் தேர்வை எழுத 15.68 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில், 11.64 லட்சம் பேர் தேர்வை எழுதி இருந்தனர். மே 11 முதல் 31ஆம் தேதி வரையிலும் ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் க்யூட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது.

35 ஷிஃப்ட்டுகளில் 321 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. இந்தியாவுக்கு வெளியே 13 நகரங்களிலும் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை கீழ் கண்ட இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
https://examinationservices.nic.in/ResultoService26/CUET2026/Login












