கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் !

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் !

சர்வதேச யோகா தினம் ஜூன் 21 இன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு இதன் 12வது ஆண்டு விழா, அனைத்துத் தலைமுறையினரின் உடல் மற்றும் மன நலனை வலியுறுத்தும் வகையில், “நல்வாழ்வு, ஞானம் மற்றும் உலக அமைதிக்கான யோகா” மற்றும் “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” ஆகியவற்றை மையமாகக் கொண்ட கருப்பொருள்களை முன்னிலைப்படுத்தி இன்று கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

பள்ளி முதல்வர் பிரபு யோகா தினத்தை துவக்கி வைத்தார். பள்ளி யோகா ஆசிரியை உமா சங்கரி அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக இதய நிறைவு தியான பயிற்றுனர் இன்ஜினியர் ஞானசேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு வகையான ஆசனங்களையும், தியான பயிற்சிகளையும் வழங்கினார்.

மேலும் யோகா மற்றும் தியானம் மாணவர்களின் கல்வி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. பிராணயாமம் மற்றும் தியானம் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, நினைவாற்றலை மேம்படுத்துகிறது. இது வகுப்பறையில் கவனத்தை ஒருநிலைப்படுத்த உதவுகிறது. மன அமைதியைத் தந்து, பதற்றத்தைத் தவிர்க்க உதவும். உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, சோர்வைப் போக்கி புத்துணர்ச்சியூட்டும் என்று மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் திரளாக மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

மாணவர்கள் கவினேஷ், அம்ரித் நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்தனர்.
மாணவர் கமலேஷ் நன்றி கூறினார்.