நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான ஹேக்கத்தான் போட்டி :
கோவில்பட்டி கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாதனை
“நான்முதல்வன்” திட்டத்தின் கீழ், CIEL Skills & Careers Training Partner மூலம் பல்கலைக்கழக அளவிலான ஹேக்கத்தான் (Hackathon) போட்டி திருநெல்வேலியில் அமைந்துள்ள ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21/04/2026 அன்று நடைபெற்றது.
இதில் நான்கு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் கோவில்பட்டி கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு உயிர்வேதியியல் துறை மாணவர்கள் ஸ்ரீலக்ஷா, துர்காதேவி, ரம்யா, ரூபன் சக்கரவர்த்தி, யோசுவா ஆகியோர் “மாணவர் சமுதாயத்திற்கான WhatsApp மார்க்கெட்டிங் (புலனம் சந்தைப்படுத்தல்” என்ற தலைப்பில் விளக்கக்காட்சி (Powerpoint Presentation) வழங்கினர்.

அவர்களின் புதுமையான அணுகுமுறை மற்றும் சிறப்பான விளக்கத்திற்காக அவர்கள் முதல் பரிசை வென்றனர்.
இந்த சாதனை, மாணவர்களின் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதோடு, அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக திகழ்கிறது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பாராட்டினார்கள்.












