JEE முதன்மை தேர்வுக்கு இன்று ( ஏப்ரல் 23 ) முதல் விண்ணப்பிக்கலாம் :
மே 2 வரை கால அவகாசம்
மே 17-ம் தேதி நடைபெறும் ஜெஇஇ பிரதானத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இன்று ( 23 – 04 – 2026 ) தொடங்குகிறது. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மே 2-ம் தேதிக்குள் விண்ணபிக்கலாம்.
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்பில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜெஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டமாக நடத்தப்படுகிறது.
2026-ம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பிரதானத் தேர்வு மே 17-ம் தேதி நடக்க இருக்கிறது.
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு இன்று (ஏப்.23) தொடங்குகிறது. தகுதியான மாணவர்கள் https://jeeadv.ac.in இணையதளம் மூலம் மே 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆண்டில் இத்தேர்வை ரூர்க்கி ஐஐடி நடக்கிறது. காலை, மதியம் என 2 தாளாக தேர்வு நடைபெறும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் சேர்க்கை இடங்கள் கலந்தாய்வு மூலம் நடத்தப்படும். இதுபற்றிய கூடுதல் விவரங்கள் மேற்கண்ட தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












