பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – ஏப்ரல் 17 முதல் ஆரம்பம்:
ஜீன் 01 ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு:
1 முதல் 3 ம் வகுப்புகளுக்கு ஜீன் 4 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:
பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
அரசு / அரசு உதவி பெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி வியாழக்கிழமை நிறைவடைகின்றன.
ஏப்ரல் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

2026-27ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டில் 45 நாட்கள் விடுமுறைக்குப் பின் ஜூன் 1 ஆம் தேதியான திங்கட்கிழமை முதல் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

வரும் கல்வியாண்டு முதல் 1–3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாட நூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இந்த வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை மாவட்ட அளவில் பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 48 நாட்கள் விடுமுறைக்குப் பின் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இங்கே பதிவிறக்கம் செய்யவும்
👇👇👇👇👇👇👇👇
2025-26-Summer Vacation & 2026-27- School Reopen- Intimation.












