தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை நீட்டிப்பு :
மாநில அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி திட்டத்தின்கீழ் பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகின்றது.
2026 காலண்டர் ஆண்டு (ஜனவரி-டிசம்பர்) மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது .
இந்நிலையில், தற்போது மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு கடைசி தேதி ஏப்ரல் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று திறந்த தமிழ்நாடு பல்கலைக்கழகம். பதிவாளர் ஜி.ஆர்.செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.












